உலகம்

காணாமல்போன இந்தோனேஷிய கப்பல் மூழ்கிவிட்டதாக உறுதிபடுத்தப்பட்டது

பாலி அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் மூழ்கிவிட்டதாக இந்தோனேசிய கடற்படை உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் கப்பலில் இருந்த 53 ஊழியர்களை எவரையும் உயிருடன் மீட்கும் நம்பிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக கடற்படைத் தலைவர் யூடோ மார்கோனோ கவலையுடன் கூறியுள்ளார்.

இந்தோனேசியாவின் கடற்படையில் உள்ள ஐந்தில் ஒன்றான குறித்த நீர்மூழ்கி கப்பல் புதன்கிழமை இந்தோனேசிய தீவான பாலிக்கு அருகே டார்பிடோ பயிற்சிகளை மேற்கொண்டபோது காணாமல்போனது.

அதேநேரத்தில் இராணுவம் ஒரு தேடலின் போது கப்பலில் இருந்து குப்பைகளை கண்டுபிடித்தது. கப்பலில் இருந்த 53 ஊழியர்களுக்கான ஆக்ஸிஜன் விநியோமும் சனிக்கிழமை அதிகாலை முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top