கல்வி

மண்முனைப் பற்றில் இடம்பெற்ற தொழிற் சந்தை.

(ரகு)

மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு நேர்முகப்பரீட்சையினூடாக வேலைவாய்ப்பினையும், பயிற்சி நெறிகளை மேற்கொள்வதற்குமான பிரதேச தொழிற்சந்தை மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் இடம்பெற்ற இத்தொழிற்சந்தை நிகழ்வை மண்முனைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி லோகினி  பங்கேற்று ஆரம்பித்து வைத்தார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திவாகரன் செல்லத்துரை, மண்முனைப்பற்று பிரதேச செயலக

மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சிவானி ஆரையம்பதி விதாதா வளநிலைய விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் திருமதி சுனிதா அகிலன் களகூட்டிணைப்பாளர் சண்முகநாதன் ரகுதாஸ் பிரதேச செயலக இளைஞர் சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கைத்தொழில் அமைச்சின் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் ஒருங்கிணைந்து ஒழுங்குபடுத்தல்களை மேற்கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டமனித வள அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்விலே மண்முனைப்பற்று பிரதேசத்தில் இயங்கும் அனைத்து தனியார் நிறுவனங்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top