கல்வி

கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறி கூட்டம் நடாத்திய கல்லூரி அதிபர்மீது சுகாதாரத்துiறையினர் வழக்குத் தாக்கல் மட்டக்களப்பில் சம்பவம்.


கோவிட்19 தனிமைப் படுத்தல் சட்டம் மற்றும் சுகாதார நடைமுறைகளை மீறி பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டத்தை நூற்றுக்கணக்கானோரை ஒன்று திரட்டி நடாத்திய மட்டக்களப்பின் பிரபல கல்லூரி அதிபர் மீது வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசலையொன்றில் பெரும் எண்ணிக்கையிலான பழைய மாணவர்கள் மற்றும் பொது  நலன் விரும்பிகள் பாடசாலை சமுகத்தினரை அழைத்து கொரோனா தனிமைப் படுத்தல் நட்டத்தை மீறி கூட்டம் நடாத்திய அக்கல்லூரியின் அதிபர் மீதே குறித்த வழக்குப் பதிவு செய்யவுள்ளதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிசார் கூட்ட மண்டபத்திலிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு பணித்ததுடன் அதிபார் மீது வழக்கும் தாக்கல் செய்துள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top