ஆரோக்கியம்

மட்டு.அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 10ஆசிரிய மாணவர்களுக்கு கொரோனா தொற்று-இரு வகுப்பறைகளுக்கு பூட்டு.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கலாசாலையின் இரு வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரிய கலாசாலையில் 100 ஆசிரிய மாணவர்களிடம் பீ.சீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த மாணவர்களுடன் கல்வி பயிலும் ஏனைய 80 ஆரிசிய மாணவர்களும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.

சுமார் ஆறு மாதங்களின் பின்னர் கடந்த திங்கட்கிழமையே கற்றல் நடவடிக்கைகளுக்காக குறித்த அரசினர் ஆசிரியர் கலாசாலை திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top