ஆரோக்கியம்

மட்டு.மாவட்டத்தில் தொடர்ந்து இடமபெறும் கொரோனா தடுப்பூசி பணிகள்–ஒரு நாளில் 416 பேர் தடுப்பூசி எற்றினர்
மட்டக்களப்பு மாவட்டததில் கொரோனா  இரண்டாம்  கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.இன்று இரண்டாம் நாளாக  தடுப்பூசிகள் ஏற்றப்படுவதாக  மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கொவிட் 19 கொரோனா இரண்டாவது தடுப்பூசி சனிக்கிழமை(01)  இரண்டாவது நாளாக இடம்பெற்றது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தலைமையில் இந்த இரண்டாவது தடுப்பூசி போடும் நிகழ்வு இடம் பெற்றது.


இதன் போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள்இ தாதியர்கள், ஊழியர்களுக்கு இந்த இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டது. இதன் முதலாவது தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் 30ம் திகதி ஏற்றப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top