ஆரோக்கியம்

எழுத்தாளர்கள், கலைஞர்கள், மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் – ஓ.கே.குணநாதன்.

கொரோனா தாக்கம் அலை அலையாக வந்து கொண்டிருக்கின்ற இந்நிலையில் மூத்த எழுத்தாளர் என்ற வகையிலும், இலங்கை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் என்ற வகையிலும் எங்களுடைய  எழுத்தாளர்கள், கலைஞர்கள், மற்றும் ஊடகவியலாளர்களையும் இந்த கொடிய கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாத்து காப்பாற்ற வேண்டிய தேவையாக உள்ளது.

என எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாலளரும், மூத்த குழந்தை எழுத்தாளருமான, டாக்டர் ஓ.கே.குணநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் புதன்கிழமை(09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

எமது சமூகம் பல இனனல்களை அனுபவித்துக் கொண்டு வரும் இந்நிலையில் கொரோனா தாக்கமும் அதிகரித்துள்ளது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், மற்றும் ஊடகவியலாளர்களையும் பாதுகாப்பது அத்தியாவசியமானதாகும். ஒரு நாடு செழிப்பாக அபிவிருத்தியும், உண்மையான அபிவிருத்தியையும் அடைய வேண்டுமாக இருந்தால் அந்த நாடு கலை, கலாசார, பண்பாட்டு  விழுமியங்களில் அபிவிருத்திகாணப்படல் வேண்டும். இந்த நாடு கலை, கலாசார, பண்பாட்டு  விழுமியங்களைக் கட்டிப் பாதுகாத்துச் செல்கின்றவர்கள்தான் இந்த எழுத்தாளர்கள், கலைஞர்களும், ஊடகவியலாளர்களுமாகக் காணப்படுகின்றனர். அண்மைக்காலத்தில் இந்தியாவில் நடிகர் விவேக், பாடகர் பாலசுப்பிரமணியம் உள்ளிடோரை நாங்கள் இழந்திருக்கின்றோம். அந்த இழப்புக்கள் நாங்கள் மீளப் பெற்றுக் கொள்ள முடியாத இழப்புக்களாகும்.

அதபோன்றுதான் இந்த நாட்டை செழிப்பான நாடாகக் கட்டி வளர்க்கின்ற எழுத்தாளர்களும், கலைஞர்களும். ஊடகவியலாளர்களும், காக்கப்படல் வேண்டும். இவர்கள்தான் நாட்டின் முதுசங்கள். இவர்கள் இல்லையேல் ஒழுங்கான நாடாக முடியாது. எனவே இவர்களையும் இந்த கொரோனாவின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும். அபிவிருத்தியைவிட இவ்வாறான கலைஞர்களின் உயிரைக் காப்பாற்றுவது மிக முக்கியமான தேவையாகக் கருதுகின்றோம். எனவே இந்த கொரோனா அலையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு, வழங்கப்படுகின்ற தடுப்பூசிகள் மிக முக்கியமான தேவையாக அமைகின்றது.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் ஒழுங்காக இன்னும் தடுப்பூசி வழங்கப்படவில்லை. எனவே இவர்களுக்கு கண்டிப்பாக இந்த தடுப்பூசியை வழங்க வேண்டும் என்பதை நான் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தித் தெரிவிக்கின்றேன். எனவே நாட்டில் உள்ள அனைத்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், மற்றும் ஊடகவியலாளர்ளுக்கும் சீரான முறையில் தடுப்பூசியை வழங்க வேண்டும் இவற்றை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top