உள்நாட்டு செய்திகள்

MT New Diamond கப்பலில் மீண்டும் தீப்பரவல்!!

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகிய MT New Diamond கப்பலில் மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

சங்கமன்கந்தையில் இருந்து 30 கடல்மையில் தொலைவில் New Diamond கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நிலவும் சீரற்ற வானிலைக்காரணமாக, கடும் மின்னல் மற்றும் பலத்த காற்று வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறித்த கப்பலின் உற்பகுதியில் காணப்பட்ட வெப்பமான நிலை தற்போது தீப்பிழம்புகளை வெளியேற்ற ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்த நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top