உள்நாட்டு செய்திகள்

sir fail??சமூகவலைத்தளங்கள் மீது கட்டுப்பாடா??

சமூக ஊடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2021 வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அரசாங்கம் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பவர்களை மௌனமாக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

கடந்த ஆட்சி சமூக வலைத்தளங்கள் மூலமாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட போதிலும், ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் அதற்காக எந்தவொரு தடைகளையும் விதிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘sir fail’ என சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்து எதிர்க்கட்சியால் உருவாக்கப்படவில்லை என்றும் இது பொது மக்களிடமிருந்து வெளிப்பட்டது என்றும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் விரகத்தியடைந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது, எனவே தற்போதைய அரசாங்கம் எதிர்காலத்திலும் கடுமையான விமர்சனங்களை எதிர்பார்க்க வேண்டும் என்றும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top